வணிகம்

சோலாபூரில் சர்வதேச ஜவுளிக் கண்காட்சி

செய்திப்பிரிவு

சர்வதேச ஜவுளிக் கண்காட்சி மஹாராஷ்டிர மாநிலம் சோலா பூரில் ஜனவரி 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது இக்கண்காட்சியை மஹாராஷ்டிர மாநில ஜவுளி அமைச்சகம் மற்றும் மபத்லால் ஃபேப்ரிக்ஸ் உடன் இணைந்து  சோலாபூர் ஆயத்த ஆடை கபட் உத்பாடக் சங்கம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 6,000 சில்லரை வர்த்தகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சீருடை துணி வர்த்தகம் ரூ.18 ஆயிரம் கோடி யாகும். இதில் ரூ.8 ஆயிரம் கோடி பள்ளி சீருடை ஜவுளியை உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் வைத்துள்ளன. பள்ளி சீருடைக் கான தேவை அதிகம் உள்ளது. அதேபோல ஆடவர், மகளிருக் கான ஆடைகளின் விற்பனையும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்த கண்காட்சியில் வெளி நாடுகளிலிருந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்பர் என சோலாபூர் ஆயத்த ஆடை கபட் உத்பாடக் சங்கத்தின் துணைத்தலைவர் நிலேஷ் ஷா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT