ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே நிறுவனம் புதிய `911’ மாடல் காரை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்தியாவில் தனது நிறுவனத் தையும் விற்பனையையும் விரிவுப் படுத்தும் நோக்கில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இரண்டு விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத் திற்கு ஏற்கெனவே 6 விற்பனை மையங்கள் உள்ளன.
“கடந்த வருடம் நாங்கள் 408 கார்களை விற்பனை செய்திருக் கிறோம். இந்தியாவில் சொகுசு கார் விற்பனை சந்தையில் நாங்கள் முக்கியமான இடத்தை பிடித்திருக் கிறோம். அதேபோல் நிலையான வளர்ச்சி அடைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்று போர்ஷே நிறுவனத்தின் இந்திய இயக்குநர் பவன் ஷெட்டி தெரிவித்தார். மேலும் இந்த புதிய 911 மாடல் கார் அதிக செயல்திறன் மிக்கதாகவும் அதே சமயத்தில் ஓட்டுவதற்கு இலகுவாகவும் இருக்கும். 911 மாடல் கார்களில் இந்த புதிய கார் 8-வது தலைமுறை யைச் சேர்ந்தது. இது முந்தைய தலைமுறை கார்களை விட 12% அதிக எரிபொருள் சக்தியை கொடுக்கக்கூடியது என்று பவன் ஷெட்டி தெரிவித்தார்.
தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இந்த புதிய 911 மாடல் காரின் டெல்லி விற்பனையக விலை 1.42 கோடி ரூபாய் முதல் 2.66 கோடி ரூபாய் வரையாகும்.