பொது வருங்கால வைப்பு நிதி(பிபிஎப்), கிஸான் விகாஸ் பத்திரம், சுகன்யா சம்ரிதி திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை 0.1 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு குறைத்திருக்கிறது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுகளுக்கு பொருந்தும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி குறைப்பு காரணமாக, வங்கிகளும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என்னும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால் சேமிப்பு கணக்குகளில் வைக்கப்படும் தொகைக்கான வட்டி விகிதம் 4 சதவீதம் என்னும் அளவிலே தொடர்கிறது. கடந்த ஏப்ரல் முதல் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ஆகிய திட்டங்களுக்கு தற்போது 8 சதவீத வட்டி வழங் கப்பட்டிருக்கிறது. ஜூன் காலாண் டுக்கு வட்டி விகிதம் 7.90 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கிஸான் விகாஸ் பத்திரத்துக்கு 7.6 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான வட்டி 8.5 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைக்கப்பட்டிருக் கிறது. அதேபோல மூத்த குடிமக்களுக்கான ஐந்தாண்டு சேமிப்பு திட்டத்துக்கான வட்டியும் 8.4 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ஒர் ஆண்டு முதல் ஐந்தாண்டு வரையிலான டெபாசிட்களுக்கு 6.90 சதவீதம் முதல் 7.70 சதவீதம் வரை வட்டி நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது. ஐந்தாண்டு டெபாசிட் விகிதமாக 7.20 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அரசாங்க கடன் பத்திரங்களின் வருமானத்துக்கு ஏற்ப சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.