வணிகம்

பேமென்ட் வங்கி: ரிலையன்ஸ், எஸ்பிஐ ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

பேமென்ட் வங்கி தொடங்க ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எஸ்பிஐ ஆகியவை ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11 நிறுவ னங்கள் பேமெண்ட் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. இதில் சோழமண் டலம் இன்வென்ஸ்மென்ட் அண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் திலீப் சாங்வி ஆகியோர் பேமெண்ட் வங்கி உரிமத்தை திருப்பிகொடுத்தனர்.

ரிலையன்ஸ், எஸ்பிஐ இணைந்து தொடங்க இருக் கும் பேமென்ட் வங்கியில் ரிலை யன்ஸ் நிறுவனத்தின் பங்கு 70 சதவீதமும், எஸ்பிஐ பங்கு 30 சதவீதமாகவும் இருக்கிறது. இந்த தகவல் பங்குச்சந்தைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பேமெண்ட் வங்கிகள் ஒரு லட்ச ரூபாய் வரை டெபாசிட் வழங் கலாம், இணையம் மூல மான வங்கி சேவை, பணப்பரி வர்த்தனை, இன்ஷூரன்ஸ், மியூச் சுவல் பண்ட் விற்பனை, டெபிட் கார்டு உள்ளிட்ட சேவைகளை வழங்க முடியும். ஆனால் கடன் வழங்கவோ, கிரெடிட் கார்டு வழங் கவோ முடியாது. அதேபோல செய்யப்படும் டெபாசிட்களிலும் 75 சதவீதத்துக்கு மேல் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

ஏர்டெல் எம் காமர்ஸ், ஆதித்யா பிர்லா நுவோ, வோட போன், டெக் மஹிந்திரா மற்றும் இந்திய தபால்துறை உள்ளிட்ட நிறுவனங்கள் பேமென்ட் வங்கி தொடங்க இருக்கின்றன.

SCROLL FOR NEXT