வணிகம்

உர்ஜித் படேல் கையெழுத்தில் புதிய 20 ரூபாய் நோட்டுகள்

பிடிஐ

புதிதாக ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள உர்ஜித் படேல் கையெழுத்தில் புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக உள்ளன.

மகாத்மா காந்தி சீரிஸ் 2005-ல் வெளியான நோட்டுகளில் ஆர் என்ற எழுத்து நம்பர் பேனலில் இடம்பெற்றிருக்கும். இதன் பின்ப குதியில் 2016 என்று அச்சாகும். வழக்கமான வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக இந்த ரூபாய் நோட்டுகள் இருக்கும். சிறிய அளவிலான மாறுதல்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.

20 எண், ஆர்பிஐ முத்திரை, மகாத்மா காந்தி உருவம், உத்திர வாத பிரிவு, கவர்னரின் கையெழுத்து என்பன வழக்கமாக நோட்டுகளில் சற்று உயர்ந்த அளவினதாக இருக்கும். ஆனால் புதிய நோட்டுகளில் இவை வழக்கமானதாக இருக்கும்.

ரூபாய் நோட்டின் முக்கோண வடிவிலான அடையாள சின்னம் இந்த புதிய ரூபாய் நோட்டில் நீக்கப்பட்டிருக்கும்.

இருப்பினும் நிறத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

SCROLL FOR NEXT