வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிவர்த்தனைகளை ஸ்மார்ட்போன் மூலமே மேற்கொள்ள முடியும். இதற்கான வசதியை ரிசர்வ் வங்கி விரைவில் கொண்டு வரப் போவதாக ஆர்விஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
ஹைதராபாதில் நடைபெற்ற ஐடிஆர்பிடி வங்கித் தொழில்நுட்ப சிறப்பு விருது வழங்கும் விழாவில் அவர் மேலும் கூறியது: ஆன்லைன் மூலமான பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வர்த்தகர்களை ஊக்குவிக்கும் விதமாக சில வரிச் சலுகைகளை அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது மொபைல்போன் உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் மூலமான பரிவர்த்தனையை அளிப்பதற்கு வசதியாக ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் (பேமென்ட் இன்டர்ஃபேஸ்) வசதியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில வாரங்களில் மூலமாக வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்வது எளிதாக இருக்கும் என்று ராஜன் கூறினார். விற்பனைக்கு எவ்வித கருவியும் தேவையில்லை. விற்பவர் கணக்கில் பணத்தை மாற்றலாம். இது பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.