வணிகம்

காப்பீடு நிறுவனங்கள் பட்டியலிட வேண்டிய கட்டாயம் இல்லை: ஐஆர்டிஏஐ அறிவிப்பு

பிடிஐ

காப்பீடு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு தயாராக இல்லாததால், அதனைக் கட்டாயப்படுத்தவில்லை என காப்பீடு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் டி.எஸ். விஜயன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐசிஐசிஐ புரூடென் ஷியல் மட்டுமே காப்பீட்டு துறையில் பட்டியலிடப்பட்ட ஒரே நிறுவனம். நியூ இந்தியா மற்றும் ஜிஐசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை பட்டியலிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தவிர அனைத்து பொதுத் துறை காப்பீடு நிறுவனங்களும் பட்டியலிட முடிவெடுத்துள்ளது.

10 ஆண்டுகள் செயல்பட்டு வரும் காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலிடுவது கட்டாயம் என கடந்த ஆண்டு வரைவு அறிக்கையில் ஐஆர்டிஏ தெரிவித் தது.

பட்டியலிட வேண்டும் என்னும் கருத்து இன்னும் வரைவு நிலையிலே இருக்கிறது, அதனை நாங்கள் கட்டாயமாக்கவில்லை. கட்டாயமாக்குவதை காப்பீட்டு நிறுவனங்கள் விரும்பவில்லை. அதனால் குறிப்பிட்ட காலத் துக்கு இந்தவிதியை கொண்டு வரப்போவதில்லை என ஐஆர்டிஏஐ தலைவர் டிஎஸ் விஜயன் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் 55 காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இதில் 24 நிறுவனங்கள் ஆயூள் காப்பீட்டு பிரிவிலும், 31 நிறுவனங்கள் பொதுகாப்பீட்டு பிரிவிலும் செயல்படுகின்றன. மோட்டார் வாகன பிரீமியம் உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் விஜயன் கூறினார்.

SCROLL FOR NEXT