பதிப்பக துறையில் இருக்கும் நிறுவனமான எஸ்.சந்த், பொதுப்பங்கு வெளியிடுவதற்கு (ஐபிஓ) `செபி’ அனுமதி வழங்கி இருக்கிறது. நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் எவர்ஸ்டோன் மற்றும் இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் இந்த ஐபிஓ மூலம் வெளியேறுகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐபிஓவுக்கு எஸ்.சந்த் நிறுவனம் விண்ணப்பித்தது. இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது. ஐபிஓ மூலம் கிடைக்கும் நிதி, கடன்களை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சையா பிரகாஷனி நிறுவனத்தை வாங்கியதால் இந்த நிறுவனத்துக்கு கடன் உருவானது.