வணிகம்

பெரும் பணக்கார நகரங்களில் முன்னிலையில் மும்பை: வாஷிங்டன், மாஸ்கோ, டொரன்டோ பின்தங்கின

பிடிஐ

உலக பணக்கார நகரங்களின் பட்டியலில் வாஷிங்டன், மாஸ்கோ, டொரன்டோ ஆகிய நகரங்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது மும்பை.

வளம் மிக்க நகரங்கள் குறியீட்டு அடிப்படையில்மும்பை 21-வது இடத்தைப் பிடித்துள்ளது. டொரன்டோ, வாஷிங்டன் டிசி, மாஸ்கோ ஆகிய நரங்கள் இதற்கு பின்னால் உள்ளன. இப்பட்டியலில் டெல்லி 35-வது இடத்தில் உள்ளது. பாங்காக், சியாட்டில், ஜகார்தா ஆகிய நகங்கள் இதற்கு பின்னால் உள்ளன.

நைட் பிராங்க் நிறுவனம் ‘செல்

வந்த பட்டியல் 2017’ல் இத்த தகவலை வெளியிட்டுள்ளது. 89 நாடுகளைச் சேர்ந்த 125 முக்கிய நகரங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் மக்களின் வாழ்க்கைத்

தரம், நகரில் உள்ள பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 900த்துக்கும் மேற்பட்ட தனியார் வங்கியாளர்கள், சொத்து ஆலோசகர்களின் கருத்துகள் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு அமைந்துள்ளது. இந்த நகரங்களில்

உள்ள பெரும் பணக்காரர்களின் தனி நபர் சொத்து மதிப்பு ரூ.200 கோடியாக உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த பத்தாண்டுகளில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 290 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவிலான லட்சாதிபதிகளில் இந்தியாவில் பங்கு 2 சதவீதமாக உள்ளது. கோடீஸ்வரர்களின் பங்கு சுமார் 5 சதவீதமாக உள்ளது. லட்சாதிபதிகள் 1.36 கோடி பேரும், கோடீஸ்வரர்கள் 2,024 பேரும் உள்ளனர்.

நூறு கோடிக்கு அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்களில் சுமார் 1,340 பேர் மும்பையில் வசிக்கின்றனர். புதுடெல்லியில் 680 நபர்களும், கொல்கத்தாவில் 280 நபர்களும், ஹைதராபாத்தில் 260 கோடீஸ்வரர்களும் உள்ளனர். 2015 ஆண்டுடன் ஒப்பிடும்போது ஹைதராபாத், பெங்களூரு நகரில் சுமார் 15 சதவீதமும் மும்பையில் 12 சதவீதமும் அதிகரித்துள்ளது.

எதிர்கால பணக்கார நகரங்கள் வரிசையில் 40 நகரங்களில் மும்பை 11 வது இடத்தில் உள்ளது. இதில் சிகாகோ, சிட்னி, பாரீஸ், சியோல், துபாய் நகரங்கள் முன்னிலையில் உள்ளன.

இந்திய பெரும் பணக்காரர்கள் இந்தியாவின் குடியிருப்பு திட்டங்களில் சுமார் 40 சதவீதம் வரை அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதலீடு செய்வார்கள், உலக அளவில் 25 சதவீதம் வரை முதலீடு செய்வார்கள் என்றும் ஆய்வு கூறியுள்ளது.

நைட் பிராங் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தேசிய இயக்குநரும், தலைமை பொருளாதார அறிஞருமான சாமண்டக் தாஸ் கூறுகையில், ரியல் எஸ்டேட்துறையில் முதலீடு அதிகரித்து வருகிறது. பெரும் பணக்காரர்களில்பலர் தங்களது முதலீடுகளை அலுவலகம் சார்ந்த ரியல் எஸ்டேட் சொத்துகள், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் மேற்கொள்வார்கள் என்று கூறினார்.

இந்தியாவில் வீடுகளின் தேவை அதிகரித்து வருவதால் அந்த திட்டங்களில் 40 சதவீதம் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்று குறிப்பிடார்.

இந்திய பெரும் பணக்காரர்கள் சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சவுதி அரேபிய நாடுகளில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். ஹாங்காங்கை சேர்ந்தவர்கள் அங்கேயே முதலீடு செய்ய விரும்புகின்றனர். தவிர பெருமளவிலான உலக பணக்காரர்கள் ஐரோப்பிய நாடுகளில் சொத்துகளை வாங்க விரும்புகின்றனர்.

27 சதவீத இந்திய பணக்காரர்கள் கலை சார்ந்த உணவு துறை, ஒயின், பழமையான (வின்டேஜ்) கார்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். சிலர் உல்லாசப் படகுகள், பந்தயக் குதிரை, தனி விமானம், விளையாட்டு அணிகளை வாங்குகின்றனர் என்று ஆய்வு கூறியுள்ளது. குறிப்பாக முக்கிய இடங்களில் அதிக சொகுசு வீடுகள் என்றால் ஒரு சதுர மீட்டருக்கு 10 லட்சம் டாலர் வரை விலை கொண்டதாக உள்ளது, இதில் கடந்த ஆண்டில் 18 வது இடத்தில் இருந்த மும்பை தற்போது 15 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

          
SCROLL FOR NEXT