வணிகம்

இந்திய டெலிகாம் துறை ஒருங்கிணையும்

செய்திப்பிரிவு

இந்திய டெலிகாம் துறை ஒருங்கிணையும் வாய்ப்பு இருக்கிறது என்று தர ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் கருத்து தெரிவித்திருக்கிறது. நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது இந்தியாவில் 6 டெலிகாம் நிறுவனங்கள்தான் லாபகரமாக இயங்கமுடியும் என்று நம்புவதாக ஃபிட்ச் தெரிவித்திருக்கிறது.

டெலிகாம் துறை வெளியிடப்போகும் இணைப்பு மற்றும் கையகபடுத்துதல் (எம் அண்ட் ஏ) விதிமுறைகளை தளர்த்துவதற்காக இந்திய டெலிகாம் நிறுவனங்கள் காத்திருப்பதாக ஃபிட்ச் தெரிவித்திருக்கிறது.

இணைப்பு மற்றும் கையகப் படுத்துதல் விதிமுறைகளில் நிறைய தெளிவு தேவைப்படுகிறது. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு டெலிகாம் துறையில் எந்தவிதமான ஒருங்கிணைப்பையும் ஏற்படு த்தாமல் தடுக்கிறது.

இந்தியாவில் முதல் நான்கு டெலிகாம் நிறுவனங்கள்தான் லாபமீட்ட முடியும். மீதம் இருக்கும் நிறுவனங்கள் நஷ்டமடையத்தான் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறது ஃபிட்ச்.

சிறிய நிறுவனங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் வளரமுடியாது, அதேபோல லாபம் ஈட்டவும் முடியாது என்ற நிலைமையில் பெரிய நிறுவனங்களோடு இந்த நிறுவனங்கள் இணைவ தற்குத்தான் வாய்ப்பு அதிகம்.

முதல் மூன்று இந்திய நிறுவனங்கள் 70 சதவிகித டெலிகாம் சந்தையை வைத்திருக்கின்றன.

SCROLL FOR NEXT