வணிகம்

உடமைகள் காணாமல் போன விவகாரம்: ஸ்பைஸ்ஜெட் ரூ.60,000 செலுத்த உத்தரவு

பிடிஐ

பயணியின் உடமைகள் தொலைந்து போன விவகாரத்தில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இழப்பீடாக 60,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் தெரிவித்திருக் கிறது.

திரிபுராவை சேர்ந்த டாக்டர் அடானு கோஷ் என்பவரின் உடமை காணாமல் போனதைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமதி ஜே.எம்.மாலிக் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நுகர்வோர் கீழமை அமைப்பு கோஷ்க்கு சாதகமாக 50,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மேல்முறையீடு செய்ததன் காரணமாக இந்த வழக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் சமரச தீர்ப்பாயத்துக்கு (என்.சி.டி.ஆர்.சி.) சென்றது. அங்கு கூடுதலாக 10,000 ரூபாய் சேர்த்து 60,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் 90,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போய்விட்டன என்று கோஷ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT