வணிகம்

பசுமை சான்றிதழ் பெற்றால் திருப்பூரின் ஏற்றுமதி அதிகரிக்கும்: தோர் நீல்சன்

செய்திப்பிரிவு

சர்வதேச பசுமை சான்றிதழ் பெற்றால் திருப்பூரின் ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்கும் என டென்மார்க் நாட்டின் சிறு மற்றும் குறு தொழில் அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் தோர் நீல்சன் தெரிவித்தார்.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

திருப்பூர் சாய ஆலைகள் சங்கத் தலைவர் நாகராஜன்:

திருப்பூரில் தினமும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்கிறோம். இந்தியாவில் வேறெங்கும் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த அளவிற்கு பூஜ்ய நிலை சுத்தகரிப்பு மறுசுழற்சி முறையைப் பயன்படுத்துவதில்லை. குழந்தைத் தொழிலாளர்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை என்றார்.

உலக நாடுகள் மத்தியில் இந்தியப் பின்னலாடைகளை எளிமையாக சந்தைப்படுத்தும் வகையில், பின்னலாடைகளுக்கு பசுமை தரச்சான்று பெறும் முயற்சியில் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வாழும் சுற்றுச்சூழலுக்கு இடையூறு இல்லாமல் ஆடைகள் தயார் செய்யப்படுவதை உறுதி செய்த பின்னரே ஆடைகளை அங்குள்ளவர்கள் வாங்குகின்றனர்.

நார்வே, டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த பையர்களின் "நார்டிக்' அமைப்பு, பசுமைத் தரச் சான்று பெற்ற ஜவுளிகளை மட்டுமே கொள்முதல் செய்கின்றன.

குறிப்பாக, ஆடை தயாரிக்கும் துணியில் பயன்படுத்தப்படும் தண்ணீர் அளவு முதல் அனைத்து விவரங்களையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.

திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில், மிக குறைவான தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், "நார்டிக்' அமைப்பின் 28 வகையான வரன்முறைகளைப் பின்பற்றி, பசுமை தரச்சான்று பெற்றால், ஐரோப்பிய நாடுகளில் ஜவுளி சந்தைப்படுத்துவது எளிதாகும். சர்வதேச பசுமை சான்றிதழ் பெற்றால் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்கும் என்றார்

SCROLL FOR NEXT