வணிகம்

துவரம் பருப்பு, உளுந்து பயிரிட மொசாம்பிக் நாட்டுடன் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

இந்தியாவின் உள்நாட்டுத் தேவைக் காக உளுந்து மற்றும் துவரம் பருப்பு வகைகளை மொசாம்பிக் நாட்டில் உற்பத்தி செய்யப்பட உள் ளன. ஆப்பிரிக்க நாடான மொசாம் பிக் நாட்டில் இந்திய பருப்பு ரகங் களை பயிர் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள் ளது. குறிப்பாக இந்தியாவில் அதி கம் பயன்படுத்தப்படும் துவரம் பருப்பு மற்றும் உளுந்து வகைகளை பயிர் செய்ய உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் பருப்பு தேவைகளைக் கணக்கில் கொண்டு ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பருப்பு இறக்குமதி இரண்டு மடங்காக அதிகரிக்கும். தற்போது ஆண் டுக்கு 1 லட்சம் டன்னாக உள்ள பருப்பு இறக்குமதி 2020-21 ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் டன்னாக உயரும்.

இந்த முடிவை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேற்று அறிவித்தார். மேலும் மொசாம்பிக் நாட்டில் பயிர் செய்யப்படும் பருப்பு வகைகள் சுவை காரணமாக இந்தியாவில் அதன் தேவைகள் அதிகமாக உள்ளது. இதர நாடுகளை விட மொசாம்பிக் நாட்டில் பயிர் செய்யப்படும் பருப்புகளுக்கு தனி சுவை உள்ளதால் அதன் தேவைகள் அதிகரித்துள்ளன.

இறக்குமதி செய்யும் பருப்பு வகைகள் எந்த வகையிலும் சுவையில் வித்தியாசப்படவில்லை என்று இறக்குமதியாளர்கள் கூறுவ தாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த பருப்பு வகைகளை மொசாம்பிக் நாட்டில் விளைவிப் பதற்குத் தேவையான தரமான விதைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இந்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர். விளைவிக்கப்படும் அனைத்து பருப்புகளையும் கொள்முதல் செய்வதற்கு ஏற்ப நிதி உதவிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் மொசாம்பிக் நாட்டிலி ருந்து தனியார் மூலமாகவும் அரசிட மிருந்து அரசுக்கு (G2G) என்கிற வகையிலும் இறக்குமதி செய்யப் படும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது. இந்த முயற்சியின் மூலம் உள்நாட்டு பருப்பு தேவைகளின் விலை நிலையானதாக இருக்கும் என்று புரிந்துணர்வு ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலவும் பருப்பு விலை அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக மியான்மர் மற்றும் மொசாம்பிக் நாடுகளிலி லிருந்து இறக்குமதி செய்யும் வாய்ப்புகளை ஆராய மத்திய அரசு ஏற்கெனவே இரண்டு முறை முயற்சிகளை மேற்கொண்டது.

இது தொடர்பாக மியான்மர் அரசு இந்திய அதிகாரிகளிடம் அளித்துள்ள பதிலில் அரசிடமிருந்து அரசுக்கு (2G2) என்கிற வகையில் இறக்குமதிக்கு தயாராக இல்லை என்றும், தனியார் மூலமான விற்பனைக்கு முன்னுரிமை கொடுக்க உள்ளதாகவும் குறிப்பிட் டுள்ளது. மொசாம்பிக் நாட்டின் பயிர் செய்யப்படும் மொத்த உற்பத் தியையும் இந்தியா கொள்முதல் செய்யும் என்று மொசாம்பிக் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2015-16 நிதியாண்டில் இந்தியாவில் 1.7 கோடி டன் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு தேவைக்கு ஏற்ப 57 லட்சம் டன் பருப்புகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT