வணிகம்

போர்ப்ஸ் ‘சூப்பர் 50’ நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ், இன்போசிஸ்

செய்திப்பிரிவு

போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ள `சூப்பர் 50’ பட்டியலில் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் ஆகியவை இடம்பிடித்துள்ளன. முன்னணி நிறுவனங்களான டாடா மோட் டார்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் போன்றவை இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

மேலும் பார்மா துறை நிறுவனங்களான சன் பார்மா, லுபின் போன்ற நிறுவனங்களும் ஹெச்டிஎப்சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கியும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

இரண்டாவது வருடமாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது. இந்தப் பட்டியலில் இன்போசிஸ், மாருதி சுசூகி, பாரத் போர்ஜ், அலெம்பிக் பார்மா, ஜிலெட் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, கன்சாய் நெரோலாக் மற்றும் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட 14 புதிய நிறுவனங் கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

கடந்த வருடம் பட்டியலில் இடம் பெற்ற டாடா மோட்டார்ஸ், எம்ஆர்எப், டாக்டர் ரெட்டீஸ், கோடெக் மஹிந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் இந்த வருட பட்டியலில் இடம் பெறவில்லை.

முதலீட்டு திறன், கண்டுபி டிப்பு, வாடிக்கையாளர் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த வருட `சூப்பர் 50’ நிறுவனங்கள் பட்டியலை தயாரித்துள்ளோம் என்று போர்ப்ஸ் இந்தியா ஆசிரியர் செளரவ் மஜூம்தார் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT