அமெரிக்காவின் முன்னணி சமூக வலைதளம் மற்றும் மல்டிமீடியா நிறுவனமான ஸ்நாப்சாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2012-ம் ஆண்டு வரை இண்டீயூட் சாப்ட்வேர் நிறுவனத்தின் ஆலோசகர் பொறுப்பில் இருந்தவர்.
2016-ம் ஆண்டிலிருந்து ஸ்நாப் சாட் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
இவருடைய மொத்த சொத்துமதிப்பு 400 கோடி டாலர்.
2015-ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட அமெரிக்காவின் 40 வயதுக்குள் கீழ் உள்ள மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலிலும் 2016-ம் ஆண்டு உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.
அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு கல்லூரியில் வடிவமைப்பு துறையில் பட்டம் வென்றவர்.