வணிகம்

உற்பத்தித்துறை பிஎம்ஐ சரிவு

பிடிஐ

உற்பத்தித் துறையில் கொள்முதல் குறியீட்டு எண் (பிஎம்ஐ) கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட சேதம் உற்பத்தித் துறையைக் கடுமை யாக பாதித்துள்ளது. இதனால் குறியீட்டு எண் டிசம்பர் மாதத்தில் கடுமையாக சரிந்ததாக தெரி விக்கின்றன.

நிகிகி இந்தியா உற்பத்தித்துறை பிஎம்ஐ அறிக்கையின்படி நவம்பர் மாதத்தில் 50.3 புள்ளியாக இருந் தது டிசம்பரில் 49.1 புள்ளியாக சரிந்துள்ளது. 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் குறியீட்டு எண் இந்த அளவுக்குக் கடுமையாக சரிந்துள்ளது.

50 புள்ளிகளுக்குக் கீழாக பிஎம்ஐ சரிந்துள்ளது 2013-ம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு இப்போதுதான். 50 புள்ளிகளுக்கு மேலாக இருந்தால் விரிவாக்கப் பணிகள் நடைபெறும். அதற்குக் கீழாக சரிந்தால் வீழ்ச்சியைக் குறிக்கும்.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கடும் மழை காரணமாக உற்பத்தித் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இந்நிறுவனங்கள் பெற்ற ஆர்டர்களை அளிக்க முடியாத சூழல் உருவானது. தற்போது 2009-ம் ஆண்டு இருந்த நிலைக்கு இந்நிறுவனங்கள் தள்ளப்பட் டுள்ளன.

ஏற்கெனவே பெற்றிருந்த ஆர்டர்களை உரிய காலத்துக்கு அளிக்க முடியாததால் புதிதாக கொள்முதல் செய்து பொருள்களை உற்பத்தி செய்வது தேக்கமடைந் துள்ளது. இந்நிலை 2013-ம் ஆண்டில் இருந்ததைப் போன்றுள் ளதாக நிகிகி ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

உற்பத்தித் துறையைச் சேர்ந்த வர்களிடம் நடத்திய ஆய்வில் 18 சதவீதம்பேர் புதிய ஆர்டர் கள் கிடைப்பது கணிசமாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள் ளனர். மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உள்நாட்டில் தேவையும் குறைந்துள்ளது கார ணம் கூறியுள்ளனர்.

ஆண்டின் இறுதியில் உற்பத் தித்துறை கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே சர்வதேச அளவிலான தேவை குறைந்துள்ள நிலையில் தென்னிந் தியாவில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு இத்துறையை கடுமை யாகப் பாதித்துள்ளது.

அதேபோல கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு பொருள் உள்ளீட்டு விலையும், விற்பனை விலையும் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வரும் நிலையில் நாட்டின் பணவீக்கம் மேலும் உயர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

சீனாவில் நிலவும் தேக்க நிலை மற்றும் உற்பத்தித் துறையில் காணப்படும் பின்னடைவு ஆகியன இந்திய சந்தையில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை ரிசர்வ் வங்கிக்கு ஏற்படுத்தி யுள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை அதிகரித்துள்ளது. மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்பு, ரூபாய் மதிப்பு மேலும் சரியும் அபாயம் ஆகியன காரண மாக நமது இறக்குமதி சுமை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உற்பத்தித்துறை பாதிப்பு காரணமாக நமது பொருளா தார வளர்ச்சி விகிதம் நிர்ணயிக் கப்பட்டதைவிட மேலும் குறையும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT