வணிகம்

பொது விநியோக திட்டத்தில் சிறுதானியங்கள் வழங்க வேண்டும்: சிஐஐ கருத்தரங்கில் பேச்சு

செய்திப்பிரிவு

மத்திய மாநில அரசுகள் செயல் படுத்தி வரும் பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசி அளவைக் குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக சிறுதானியங்களை அளிக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கருத் தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சென்னையில் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வரின் தனிப்பிரிவு முன் னாள் சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் உரையாற்றுகையில் இதனைக் கூறினார். தென் னிந்திய மாநிலங்களில் விளை விக்கப்படாத கோதுமை இன்று தினசரி உணவுகளில் இடம்பிடித் துள்ளது. அதற்கு காரணம் கோதுமை உற்பத்தியாளர்களின் அரசியல்தான். அதுபோல சிறு தானிய உற்பத்தியாளர்களும் முயற்சிகளில் இறங்க வேண்டும். அதில் ஒரு பகுதியாக பொது விநியோக திட்டத்தில் சிறுதானி யங்களை வழங்கும் விதமாக விவசாயிகள் கோரிக்கைகளை அரசியல் ரீதியாக முன்வைக்க வேண்டும்.

பசுமைப் புரட்சியில் கோது மைக்கும் அரிசிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டன. இதனால் சிறு தானிய உற்பத்தியும், பயன் பாடும் குறைந்து விட்டன. இனி அடுத்த பத்தாண்டுகளில் சிறுதானி யத்துக்கான இயக்கம் தொடங்க வேண்டும். உணவு பாதுகாப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம். அதை அடுத்த கட்டமாக ஊட்டச் சத்து பாதுகாப்பு என்கிற வகையில் கொண்டு செல்ல வேண்டும். அப்படி செய்வதற்கு சிறு தானிய பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் தலைமைச் பொது மேலாளர் எஸ்.நாகூர் அலி ஜின்னா, தமிழ்நாடு அரசின் விவசாயத்துறை செயலர் வி.தக்ஷினாமூர்த்தி, சிஐஐ தமிழ் நாடு தலைவர் ரவிச்சந்திரன் புரு ஷோத்தமன், மருத்துவர் கு.சிவரா மன், இண்டெகரா சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் ராம் சுப்ரமணியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத் தரங்கினை சிஐஐ அமைப்புடன் இண்டெகரா சாப்ட்வேர் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

SCROLL FOR NEXT