ரிலையன்ஸ் மற்றும் அதன் இங்கிலாந்து கூட்டு நிறுவனமான பிபி ஆகியவை எரிவாயு எடுப்பதற்காக இதுவரை ரூ.4,500 கோடி முதலீடு செய்துள்ளன. கேஜி-டி6 பகுதியில் தற்போதைய நிலையிலே உற்பத்தி தொடர்வதற்காக இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2009 ஏப்ரலில் இந்த பகுதியில் இருந்து எரிவாயு எடுக்கும் பணியை தொடங்கியது இந்த நிறுவனம். இதுவரை 7 வருடங்கள் முடிந்துவிட்டது. அதிகபட்சமாக கடந்த மார்ச் 2010-ம் ஆண்டு 69.43 MMSCFD உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது 8.7 MMSCFD என்னும் அளவிலே உற்பத்தி இருக்கிறது.
உற்பத்தி சரிவை தடுப்பதற்காக தொடர்ந்து இந்த நிறுவனம் முதலீடு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது பக்கவாட்டிலும் துளையிடும் பணியிலும் இந்த நிறுவனங்கள் உள்ளன.