முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.356 கோடி நிதி திரட்டிய 78 நிறுவனங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் நாம் மேகவால் நேற்று நாடாளுமன் றத்தில் தெரிவித்துள்ளார்.
78 நிறுவனங்கள் ரூ.356 கோடியை முதலீட்டாளர்களிட மிருந்து நிதி திரட்டியுள்ளன. நிதி திரட்டிய பிறகு ஆவணங்கள் மற்றும் பேலன்ஸ் ஷீட்களை இந்த நிறுவனங்கள் தாக்கல் செய்யவில்லை. மக்களிடம் இருந்து நிதி திரட்டிய பிறகு இந்த நிறுவனங்கள் தலைமறைவாகி விட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் பெரும் பாலும் ஆந்திரப்பிரதேசம், தமிழ் நாடு, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், உத் தரப்பிரதேசம், ஒடிஷா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை யாக உள்ளன. 78 நிறுவனங்களில் குஜராத் மாநிலத்திலிருந்து 17 நிறுவனங்கள் இந்த விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதற்கு அடுத்ததாக 15 நிறுவனங்கள் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவையாக உள்ளன. தமிழ்நாட்டில் 9 நிறுவனங்களும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 8 நிறுவனங்களும் புதுடெல்லியில் 5 நிறுவனங்களும் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா 4 நிறுவனங்களும் கர்நாடகத்தில் 2 நிறுவனங்களும் நிதி திரட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளன.
``மத்திய வர்த்தக நலத்துறை அமைச்சகம் முதற்கட்டமாக 238 நிறுவனங்கள் தலைமறைவு நிறு வனங்கள் என கண்டறிந்துள்ளது. இந்த நிறுவனங்கள் பொதுமக்க ளிடம் நிதி திரட்டிவிட்டு பின்பு தலைமறைவாகியுள்ளன. இதில் 160 நிறுவனங்களை கண்டுபிடித்து விட்டதால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது 78 நிறுவனங்களை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை’ என்று மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் அர்ஜுன் ராம் மேகவால் தெரிவித்துள்ளார்.
560 டன் தங்கம் இறக்குமதி
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 560.33 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால் தெரிவித்துள்ளார்.
2014-15-ம் நிதியாண்டில் 915.47 டன் தங்கமும் 2015-16-ம் நிதியாண் டில் மொத்தம் 968.06 டன் தங்க மும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தாகவும் ஆண்டுக்கு தங்கத்தின் தேவை 800 டன் முதல் 900 டன் வரை இருப்பதாகவும் மேகவால் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ. 476 கோடி
கடந்த இரண்டு வருடங்களில் நிறுவனங்களின் சமூக கொடை (சிஎஸ்ஆர்) மூலமாக தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.476 கோடியை நிறுவனங்கள் வழங்கியுள்ளதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் கிளீன் கங்கா நிதிக்கு நிறுவனங்கள் ரூ.21 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
``2015-16ம் ஆண்டில் மொத்தம் 5,097 நிறுவனங்கள் ரூ. 355 கோடி ரூபாயை நிறுவனங்களின் சமூக கொடையின் கீழ் தூய்மை இந்தியா திட்டத்திற்காக செலவு செய்துள்ளன. 2014-15ம் ஆண்டில் 7,334 நிறுவனங்கள் ரூ.121 கோடி ரூபாயை நிறுவனங்களின் சமூக கொடைக்காக செலவு செய்துள்ளதாக’’ அமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால் தெரிவித்துள்ளார்.