வணிகம்

பில்லியன் டாலர் நிறுவனங்கள்: டைகான் அறிமுகம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்களாக வருங்காலத்தில் மாற வாய்ப்பு இருக்கும் நான்கு நிறுவனங்களை டைகான் நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தியது. பில்லியன் டாலர் பேபிஸ் திட்டத்தின் கீழ் இதனை டைகான் அறிவித்தது.

இதற்காக 18 நிறுவனங்களை எடுத்துக்கொண்டு அந்த நிறுவனங்களை ஆராய்ந்து வெளியிடப்பட்டன. இதில் பைனான்சியல் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ், விஏ டெக் வபாக், கான்குரெண்ட் சொல்யூஷன்ஸ் மற்றும் மேக்ஸ்டர் ஆகிய நிறுவனங்கள் வருங்காலத்தில் பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்களாக உயரும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனுப் பக்‌ஷி மற்றும் பேங்க் ஆப் அமெரிக்காவின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் நாராயணன் குழு இந்நிறுவனங்களை தேர்ந்தெடுத்தது. இதில் விஏ டெக் வபாக் ஏற்கனவே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும்.

SCROLL FOR NEXT