வணிகம்

கடலில் உள்ள கனிம சுரங்கங்களை விரைவில் ஏலம் விடுவதற்கு புதிய சட்ட வழிமுறை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

பிடிஐ

கடலில் உள்ள கனிம சுரங்கங் களுக்கான ஏலத்தை விரைவில் நடத்துவதற்கு புதிய சட்ட வழிமுறைகளை சுரங்கத்துறை அமைச்சகம் உருவாக்கி வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடலில் உள்ள கனிம சுரங்களுக்கான ஏலத்தை விரைவில் நடத்தி முடிப்பதற்கு சட்ட அமைச்சகத்துடன் இணைந்து புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகிறோம். தற்போது நடைமுறையில் உள்ள சட்டமும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் இதில் சில கட்டுப்பாடுகள் இருப்பதால் கடலில் உள்ள கனிம சுரங்கங்களுக்கான ஏலத்தை விரைவாக நடத்தமுடிவதில்லை. மேலும் தற்போதைய சட்டப்படி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கனிம சுரங்கங்கள் ஒதுக்கப்படுகிறது. அதனால் ஏலத்தை முறைப்படுத்தி நடத்து வகையில் புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகிறோம் என்று கோயல் தெரிவித்தார்.

கடலில் உள்ள கனிம சுரங் கங்ளை கண்டறிவது மற்றும் கனி மங்களை எடுப்பதற்கான விதி முறைகள் மாற்றியமைக்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு தெரிவித்தது. 2002-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கடல் பகுதி கனிமங்கள் மேம்பாடு மற்றும் விதிமுறைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு கனிம சுரங்கங்கள் ஒதுக்கீடுக்கான ஏலம் முறைப்படி நடத்தப்பட உள்ளது. தற்போது நடமுறையில் உள்ள சட்டத்தில் கடலில் உள்ள கனிம சுரங்கங்களுக்கான ஏலத்தை நடத்துவதற்கு எந்த வழிமுறைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘முடங்கியுள்ள மின் திட்டங்களுக்கு விரைவில் தீர்வு’

முடங்கியுள்ள அல்லது கிடப்பில் உள்ள நீர் மின்சார திட்டம் மற்றும் அனல் மின் நிலைய திட்டங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய மின்சாரத்துறைத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் மின் திட்டங்களுக்கு தீர்வு வழிமுறைகளை கிட்டத்தட்ட உருவாக்கி விட்டோம். துறை கணக்கீட்டின் படி, 35,000 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையங்கள், 11,639 மெகாவாட் திறனுள்ள நீர் மின் நிலையங்கள் முடங்கிய நிலையில் உள்ளன. இவற்றின் மதிப்பு கிட்டத்தட 1.6 லட்சம் கோடி ரூபாய்.

SCROLL FOR NEXT