வணிகம்

இந்தியா ஊழல் நாடு என்ற எண்ணம் தவறானது

செய்திப்பிரிவு

இந்தியாவில் ஊழல் மலிந்து கிடக்கிறது, இங்குள்ள அனைவருமே ஊழல்வாதிகள் என்ற தோற்றம் தவறானது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) பொன் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

இவ்விதம் கூறுவதால் தாம் ஊழலை நியாயப்படுத்துவதாகக் கருதக்கூடாது. ஆனால் ஒவ்வொரு வரும் மற்றவரை ஊழல் பேர்வழி என்று நம்ப வேண்டாம். நீங்கள் ஊழல் வாதியெனில், அனைவரை யும் ஊழல்புரிய தூண்டுகிறீர்கள். இத்தகைய நிலை மிகவும் மோசமா னது. இதுபோன்ற நிலையை ஒரு போதும் நாம் பின்பற்றக் கூடாது. தாமாக முன்வந்து ஊழலுக்கு வக்காலத்து வாங்குவதை நான் எப்போதும் எதிர்த்து வந்துள்ளேன்.

இந்தியா என்றாலே ஊழல் மலிந்த நாடு என்ற எண்ணம் உருவாகியுள்ளது. உலகிலேயே இந்தியர்கள் அனைவருமே ஊழல் வாதிகள் என்று அர்த்தமாகிறது. இது முற்றிலும் தவறானது.

இந்த மாதிரியான சூழலில் கண்காணிப்பு அமைப்புகள்தான் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகள் மீறியது அப்பட்டமாக தெரியவந்தால்தான் கண்காணிப்புக் குழுக்கள் தலையிட வேண்டும். அவ்விதம் இல்லாத பட்சத்தில் கண்காணிப்புக் குழுக்க ளின் பணிச் சுமை அதிகரிக்காது.

கட்டுப்பாட்டு அமைப்புகள் அல்லது ஆயுதமேந்திய அமைப்பு கள் தலையிட வேண்டியது அவசி யம். அது எப்போது எனில் விதிகள் அப்பட்டமாக மீறியிருக்கும்பட் சத்தில்தான். அது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் வருகி றது என்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் சுய கட்டுப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

வேண்டுமென்றே திட்டமிட்டு தவறு செய்யாதவர்கள் மீது அவர்களது தவறை உணர்த்தி அதை புரிய வைக்கும் பணியை கட்டுப்பாட்டு அமைப்புகள் மேற் கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் கட்டுப் பாட்டு அமைப்புகள் அதைச் செய்யவில்லை. இதனாலேயே அவர்களது பணிப்பளு அதிகரிக் கிறது என்று குறிப்பிட்டார். கட்டுப் பாட்டு அமைப்புகளின் செயல் பாடு முற்றிலுமாக தோல்வி யடைந்துவிடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பெரிய நிறுவனங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசிய அவர் தனி நபருக்குப் பொருந் தும் விதிகளை நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்று அவர் கூறினார்.

பெரிய நிறுவனங்கள் தனி நபருக்கான விதிகளை எதிர்பார்ப் பது சரியல்ல என்று குறிப்பிட்ட அவர், நிறுவனங்களுக்கென தனி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் அவை பார்க்கப்படும் என்று கூறினார். நிறுவனங்கள் அனைத்தும் விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். என்ன செய்ய வேண்டும் என்பதை சட்ட விதிமுறைகள் தெளிவாகக் கூறியுள்ளன. அதேபோல நிறுவனங் கள் எதைச் செய்யக் கூடாது என் பதையும் தெளிவாகக் குறிப்பிட் டுள்ளன என்றார். நிறுவனங்களுக் கான சட்ட விதிகளின்படி நிறுவனங் கள் செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

சட்ட விதிகள் சரியாக இல்லா விடில், அதை மாற்ற வேண்டும். ஆனால் நிறுவனங்கள் சட்ட விதி களுக்குள்பட்டு செயல்பட வேண்டி யது மிகவும் அவசியம். சட்டம் எதைச் செய் என்று சொல்கிறதோ அதை மட்டுமே செய்ய வேண்டும். செய்யக் கூடாது என்று சொல்வதை செய்யக் கூடாது. நிறுவனங்கள் தங்களது வரவு, செலவு கணக்கு களை வெளிப்படையாக நிர்வகிக்க வேண்டும். மேலும் நாட்டின் வளத்தை மேம்படுத்துவதில் தங்ளுடைய பங்களிப்பு உள்ளது என்பதை நிறுவனங்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

புதிய நிறுவன சட்டம் குறித்து பேசிய சிதம்பரம், சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது மிகவும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்றார்.

சுய ஒழுங்கு முறை, சட்ட விதிகளின்படி நடத்தல், இயக்குநர் குழு இயக்குநர்கள் மற்றும் பங்கு தாரர்களின் நலன் மற்றும் எப்போ தாவது நிகழும் சில அபூர்வமான விஷயங்களில் கட்டுப்பாட்டு அமைப்புகள் தலையிட்டு, விதி களை அப்பட்டமாக மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் குற்றம் நிரூபணமாக வேண்டும் என்று கூறினார்.

புதிய நிறுவனச் சட்டத்துக்கு கடந்த ஆண்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. முதலீட்டாளர் நலன் காக்கவும், நிறுவனங்கள் தவறு செய்வதைத் தடுக்கவும் பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், ஊழல் விவ காரத்தால் பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளோம். அதை எதிர் கொண்டு சமாளிப்போம். ஆனால் இந்தியா ஊழல் நாடு என்ற எண்ணம் மிகவும் தவறானது என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT