உலகின் மிகவும் மெல்லிய தான டேப்லெட் கம்ப்யூட்டரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) டிம் குக் இதனை கலிபோர்னியாவில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.
நியு ஐ-பேட் ஏர் 2 என்ற பெயரிலான இந்த டேப்லெட் கம்ப்யூட்டர் மற்றும் ஐ-பேட் மினி 3 ஆகிய இரண்டு தயாரிப்புகளை அவர் அறிமுகம் செய்தார். முதல் முறையாக இந்த டேப்லெட் கம்ப்யூட்டரில் `ஆன்ட்டி ரெப்ளக்டர் கோடிங்’ தரப்பட்டுள்ளதால் இதன் மீது ஒளி பட்டாலும் அதனால் கண் கூசாது. 8 மெகா பிக்ஸெல் கேமரா, புதிய தலைமுறை ஏ8எக்ஸ் சிப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
மினி மற்றும் ஏர் டேப்லெட் கம்ப்யூட்டர்கள் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை. கைவிரல் ரேகை பதித்தபிறகே இது செயல்படத் தொடங்கும். ஐ-பேட் ஏர் 2-வின் விலை 499 டாலராகும்(ரூ.30,500). ஐ-பேட் மினி 3-ன் விலை ரூ. 399 டாலராகும்(ரூ24,500).