வணிகம்

சணல் துறைக்கு உதவ தயார்: நிர்மலா சீதாராமன்

பிடிஐ

சணல் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைந்து, அந்த துறைக்கு முடிந்தவரை உதவ தயாராக இருப்பதாக வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சணல் துறை வர்த்தக அமைச்சகத்தின் கீழ் வராது, இது ஜவுளி அமைச்சகத்தின் கீழ்தான் வரும் என்றாலும் வர்த்தக அமைச்சகம் தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் என்றார். தேசிய சணல் வாரியம் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வர்த்தக அமைப்பினை சேர்ந்தவர்கள், மில் உரிமை யாளர்கள், வர்த்தக அமைப்புடன் தொடர்பு டைய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். சணலுக் கான ஏற்றுமதி வாய்ப்பு அதிகம். மேலும் இது சுற்றுச்சூழலுக்கு சாதகமானது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பங்களா தேஷ் நாட்டின் சணல் சந்தை இந்தியாவின் சணல் சந்தையை பாதிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நம்முடைய சணல் தயாரிப்பு தரமாக இல்லாததால், பங்களாதேஷிடம் சந்தையை இழந்து வருகிறோம். தரத்தை அதிகரிப்பதற்காக விவசாய அமைச்சகத்திடம் பேசுவதாகவும் அவர் கூறினார்.

கவலை தேவையில்லை

தொழில் உற்பத்தி குறியீடு ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்ததால் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். பிஸினஸ் சூழ்நிலையை உருவாக் குவதற்கு அரசு கடந்த சில மாதங்களாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் ஐஐபி தகவல்கள் இரண்டாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு வர்த்தக கொள்கை தயாரிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது. கூடிய விரைவில் இது வெளியிடப் படும். இது இந்திய உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் சாதகமாக இருக்கும்.

SCROLL FOR NEXT