மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இதன் மூலம் ரெபோ எனப்படும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடர்கிறது.
மேலும் சிஆர்ஆர் எனப்படும் வங்கிகளின் ரொக்க கையிருப்பபு விகிதமும் 4 சதவீதமாகத் நீடிக்கும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் ரெபோ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.