ஐஎல்எப்எஸ் செக்யூரிட்டி சர்வீசஸ் (ஐஎஸ்எஸ்எல்) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை இண்டஸ் இந்த் வங்கி வாங்குகிறது. இண்டஸ்இந்த் வங்கி அறிக்கை மூலம் இந்த தகவலை தெரிவித்திருக்கிறது.
ஐஎஸ்எஸ்எல் நிறுவனம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிறு மற்றும் நிறுவன முதலீட்டாளர்களை இந்த நிறுவனம் கையாண்டு வருகிறது. 1000-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் இருக்கின்றன.
இண்டஸ்இந்த் வங்கியிலும் 500-க்கும் மேற்பட்ட புரோக்கர் கள் இருக்கிறார்கள். ஐஎஸ்எஸ் எல் நிறுவனத்தைக் கையகப் படுத்தும் போது, மேலும் இந்த பிரிவில் விரிவடையலாம் என இண்டஸ்இந்த் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ரொமேஷ் சோப்தி தெரிவித்தார்.
பல தரப்பட்ட நிதிசேவைகளை ஐஎஸ்எஸ்எல் மூலம் செய்யமுடி யும். தற்போது ஒரு நாளைக்கு 10 லட்சம் வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. இந்த இணைப்பு இன்னும் மூன்று மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஎஸ்எஸ்எல் நிறுவனம் 2014-ம் நிதி ஆண்டில் 203 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியது. அடுத்தடுத்த நிதி ஆண்டுகளில் முறையே ரூ.255 கோடி மற்றும் ரூ.277 கோடி வருமானத்தை ஈட்டியது.