வணிகம்

ராணுவத்திடம் 2,000 துப்பாக்கிகள் ஒப்படைப்பு: அதானி டிஃபென்ஸ் நிறுவனம் சாதனை

செய்திப்பிரிவு

குவாலியர்: மத்​திய அரசின் ‘மேக் இன் இந்​தி​யா' திட்​டத்​தின் கீழ் உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​பட்ட 2,000 பிரஹார் இலகு ரக இயந்திரத் துப்​பாக்​கி​களின் (எல்​எம்​ஜி) முதல் தொகு​தியை இந்​திய ராணுவத்​திடம் அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்​பேஸ் நிறுவனம் ஒப்​படைத்​து உள்​ளது.

இது குறித்து அதானி டிஃபென்ஸ் நிறுவன தலை​மைச் செயல் அதிகாரி ஆசிஷ் ராஜ்வன்ஷி கூறும்போது, ”இஸ்​ரேல் வெப்​பன் இண்டஸ்ட் ​ரீஸின் தொழில்​நுட்​பக் கூட்​டாண்​மை​யுடன் இந்​தத் துப்பாக்​கி​கள் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன. மொத்​தம் 40,000 துப்பாக்கிகளை தயாரிப்​ப​தற்​கான இந்த ஒப்​பந்​தத்​தில், முதல் தொகு​தியை ஒப்பந்தக் காலத்​திற்கு 11 மாதங்​களுக்கு முன்னதாகவே அதானி நிறு​வனம் விநி​யோகித்​துள்​ளது. வெறும் உதிரி​பாகங்​கள் தயாரிப்பாளர் என்ற நிலை​யி​லிருந்து ஆயுதத் தயாரிப்பு நிறுவனமாக உரு​வெடுத்​துள்​ளோம். ஆண்​டுக்கு ஒரு லட்​சம் துப்பாக்​கி​களைத் தயாரிக்​கும் திறன் குவாலியர் ஆலைக்கு உள்ளது" என்​றார்.

          

பாது​காப்பு அமைச்சக அதி​காரி ஏ.அன்​பரசு பேசுகை​யில், "காலக்கெடு​வுக்கு முன்​ன​தாகவே ஒப்​பந்​தம் நிறைவேற்றப்பட்டுள்​ளது. இது, இந்​திய பாது​காப்​புத் துறை சூழலுக்கு மிக முக்​கிய​ம். தொழில் கூட்​டாளி​களுக்கு அரசு தோளோடு தோள் நின்று உதவும்" என்​றார்.

இஸ்​ரேல் வெப்​பன் இண்​டஸ்ட்​ரீஸ் தலை​மைச் செயல் அதி​காரி ஷுகி ஸ்வார்ட்ஸ் கூறுகை​யில், "இஸ்​ரேலில் ‘நெகேவ்' எல்​எம்ஜி என அழைக்​கப்​படும் இந்​தத் துப்​பாக்​கி​கள் இந்​திய ராணுவத்​தின் வலிமையை மேலும் வலுப்​படுத்​தும். இந்​தி​யத் தேவை​களுக்​கான எங்​களது விநி​யோகத்​தில் எந்​தப்​ பா​திப்​பும்​ இருக்​காது" என்​றார்​.

SCROLL FOR NEXT