வணிகம்

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு தண்டனை: விரைந்து செயல்பட அமலாக்கத் துறையினருக்கு ஜேட்லி அறிவுரை

செய்திப்பிரிவு

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு விரைவாக தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையினரை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார்.

அமலாக்க தின நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், வரி ஏய்ப்பு செய்வதால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு வரி ஏய்ப்புச் செய்பவர்கள் மீது நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் வருவாய்த்துறை மற்றும் அமலாக்கத்துறை ஒன்றிணைந்து செயல்பட்டு விதிமீறல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அரசு மக்களை நம்பு கிறது. முறைப்படி அந்நியச் செலா வணியை சரிவர கையாள்வார்கள் என நம்புகிறது. இத்தகைய செயல் பாடுகளில் விதி மீறல் நடவடிக் கைகளில் ஈடுபடுவோர் மீது அமலாக்கத் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு தண்டனை அளிக்கலாம். அதை விரைவாக வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த துறைகளில் எவரெவர் இத்தகைய விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடு கின்றனரோ அவர்களை அடை யாளம் காண்பது அவசியம் என்றார்.

அரசுக்கு உரிய வருவாய் கிடைக்கச் செய்வதில் அமலாக்கத் துறை முறையாக செயல்படும் என தான் உறுதியாக நம்புவதாக ஜேட்லி குறிப்பிட்டார்.

தாமாக முன்வந்து வரி செலுத்தும் சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும் என்ற இலக்கில் பயணிப்பதாகக் குறிப்பிட்ட அவர் இந்தியா தற்போது வளரும் நாடுகளிலிருந்து வளர்ச்சியடைந்த நாடு என்ற நிலையை நோக்கி முன்னேறி வருகிறது. அத்தகைய சூழலில் தாமாக முன்வந்து வரி செலுத்தும் சூழல் நிறைந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வரி ஏய்ப்பு என்பது பொது மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல அது தேச நலனுக்கும் எதிரானது என்பதை உணர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

நிறுவன செயல்பாடுகளில் உள்ள பன்முக அடுக்குகள் மூலம்தான் மோசடி நிகழ்கிறது. குறிப்பாக அந்நிய செலாவணி விதிமீறல் நடவடிக்கைகளை மிகக் குறுகிய கால அவகாசத் தில் கண்டுபிடித்துவிட முடியும். அந்நியச் செலாவணி மோசடி, ரவுண்ட் டிரிப்பிங், வரி ஏய்ப்பு, போலியான நிறுவனங்களை உரு வாக்குதல் (ஷெல் நிறுவனங்கள்) ஆகிய அனைத்துமே தண்டனைக் குரிய குற்றமாகும். இவ்விதம் வரி ஏய்ப்பு செய்வதால் கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாட்டுக் கான திட்டப் பணிகளுக்கான பணத்தை இத்தகைய வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் கெடுத்து விடுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னேறிய தொழில்நுட் பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எங்கெல்லாம் தவறு நிகழ்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விட முடியும். அந்நியச் செலாவணி மோசடி மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் மூலம் விதிமீறலில் ஈடுபடுவோரை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும் என்று அவர் கூறினார்.

வரி ஏய்ப்பு செய்வோரை அடையாளம் காண்பதன் மூலம் மற்றவர்கள் வரி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு வருவர் என்று சுட்டிக் காட்டிய அவர், அதற்கு வரி ஏய்ப்பு செய்வோருக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்தவேண்டும் என்றார்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் வரி ஏய்ப்பு மிகக் குறைவு. அதேபோல தாமாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்றும் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது நிர்ணயித்த வரி வருவாய் இலக்கான ரூ. 19 லட்சம் கோடியை விட அதிக மான வரி வருவாய் வசூலாகும் என்றார்.

SCROLL FOR NEXT