சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வோல்டெக் நிறுவனம் குவைத் மற்றும் ஜாம்பியாவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ. 300 கோடி வருமானம் ஈட்டும் வோல் டெக் நிறுவனம் மின்சார டிரான்ஸ் பார்மர்ஸ் மற்றும் மின்சாரம் சார்ந்த பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.குவைத்தில் செயல்படும் ரேங்க் ஜெனரல் டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் வோல்டெக் நிறுவனத் தயாரிப்புகளை அங்கு விற்பனை செய்யவும், அங்குள்ள மின் நிலையங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளவும் வழியேற்பட்டுள்ளதாக நிறுவ னத்தின் தலைவர் எம். உமாபதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து இன்ஜினீயரிங் சார்ந்த பணிகள், அதற்குரிய பொருள்களை தயாரித்தல், கட்டுமானப் பணி களை மேற்கொள்வதற்கும் ஒப்பந்தம் வகை செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேபோல ஜாம்பியாவைச் சேர்ந்த கோல்ட்பெர்க் அசோசி யேட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளில் சூரிய ஒளி சார்ந்த மின் திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
முதல் கட்டமாக 10 மெகாவாட் சூரிய மின்னாற்றல் திட்டத்தை அமைக்க உள்ளதாகவும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 60 கோடி என்றும் அவர் குறிப்பிட்டார். ஜாம்பியா நிறுவனத்துக்கு சூரிய மின் பலகைகளை இந்தியாவில் உள்ள ஆலையில் தயாரித்து ஏற்றுமதி செய்யவும் ஒப்பந்தம் வகை செய்துள்ளதாக உமாபதி தெரிவித்துள்ளார்.