இங்கிலாந்து மத்திய வங்கி 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு 0.25 சதவீதம் அடிப்படை வட்டிக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
2016ல் நிலவும் மந்தமான நிலையை மாற்ற இது அவசியமாக உள்ளது மேலும் இதன் தாக்கம் அடுத்த ஆண்டு வளர்ச்சியிலும் பிரதிபலிக்கக்கூடாது என்பதற் காக வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று பேங்க் ஆப் இங்கிலாந்து குறிப்பிட்டுள்ளது. சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப 0.5 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக வட்டியை குறைத்துள்ளது.
ஆனால் பெருவாரியான நிதிக் கொள்கை குழு உறுப்பினர்கள் இந்த ஆண்டிலேயே மீண்டும் வட்டிக் குறைப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். வட்டியை முழுமையாக குறைத்து பூஜ்யம் என்கிற அளவில் இருக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வட்டிக் குறைப்பு குறித்து முடிவெடுக்கும் நிதிக் கொள்கை குழுவின் ஒன்பது உறுப்பினர்களும் இதற்கு அனுமதி அளித்துள்ளனர். மார்ச் 2009க்கு பிறகு இங்கிலாந்து மத்திய வங்கி மேற்கொண்ட வட்டி குறைப்பு நடவடிக்கை என்று குறிப்பிடப்படுகிறது.