வணிகம்

1 ஜிகா டன் கார்பன் உமிழ்வை சேமிக்க பேட்டரி வாகன பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: நிதி ஆயோக் பரிந்துரை

செய்திப்பிரிவு

இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ஜிகா டன் கார்பன் உமிழ்வை சேமிக்க வேண்டுமென்றால் பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை யில் தெரியவந்துள்ளது.

மாற்று இயக்க தீர்வுகள் குறித்து நிதி ஆயோக் ஆய்வு மேற் கொண்டது. இந்த ஆய்வு தொடர் பான முடிவைகளை அறிக்கையாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. 2017-ம் ஆண்டிலிருந்து 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ஜிகா டன் கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும் என்றால் இந்தியா அதிகமான பேட்டரி வாகனங் களை பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் 2030-ம் ஆண் டுக்குள் 60,000 டாலர் அளவுக்கு எரிபொருள் செலவைக் குறைக்க வேண்டும் என்றால் பலரும் பகிர்ந்து கொள்ளும் வாகனங்களை அதிகமாகப் பயன்படுத்த வேண் டும் என்று அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

இந்தியாவில் பேட்டரி வாக னங்களை அதிகப்படுத்துவதற்கு அடுத்த 15 வருடங்களில் என்னென்ன திட்டங்களை பின் பற்ற வேண்டும் என்ற விவரங்கள் பற்றியும் மேலும் புதிய பசுமை கொள்கைக்கு அடிப்படை கொள் கைகள் பற்றியும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

134 பக்கம் உள்ள இந்த அறிக்கையில், வாகனங்களை பலரும் பகிர்ந்து கொள்ளும் முறையை அதிகப்படுத்துவது, பெட்ரோல், டீசல் வாகனங்களி லிருந்து பேட்டரி வாகனங் களுக்கு மாறுவது, கார்களுக்காக நகரங்கள் இல்லாமல் மனிதர் களுக்கான நகரங்களை உருவாக்கு வது என மூன்று பரிந்துரைகளை அளித்துள்ளது.

``இதுபோன்ற மாற்றங்கள் கிளீன் எனர்ஜியில் இந்தியாவை சர்வதேச தலைமையாக்கும். மேலும் இதுபோன்ற மாற்றங் களைக் கொண்டு வரும் போது மற்ற நாடுகளும் கார்பன் உமிழ்வை குறைப்பதற்காக இந்த செயல்பாடு களை பின்பற்றும்’’ என்று அமெரிக்காவை சேர்ந்த ராக்கின் மவுண்டைன் நிறுவனம் கூறியுள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோல் வாக னங்கள் பதிவு செய்வதை குறைக்க வேண்டும் என்றும் பேட்டரி வாகனங்களுக்கு நிதி உதவி மற்றும் மானியங்களை வழங்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. மேலும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகன விற்பனையின் மூலம் வரி வரு வாயை வாகன சார்ஜிங் மையங் கள் அமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கை யில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT