வணிகம்

மிகப் பெருமளவு வேலை இழப்பு இருக்காது: மத்திய அரசுக்கு ஐடி நிறுவனங்கள் உறுதி

பிடிஐ

தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரும் அளவுக்கு வேலை இழப்பு ஏற்படாது என்று மத்திய அரசுக்கு ஐடி நிறுவனங்கள் உத்தரவாதம் அளித்துள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இத்துறையின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை இருக்கும் நிலையில் வேலை இழப்பு ஏற்படாது என்றும் சுட்டிக் காட்டினார்.

பணியாளர்களின் ஆண்டு செயல்பாட்டு அறிக்கையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படுவது வழக்கமான நடவடிக்கைதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனங்கள் பெருமளவு ஆள்குறைப்பு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த நிறுவனங்களோ அதுபோன்று இந்த ஆண்டில் பெருமளவு ஆள்குறைப்பு செய்யும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிராட்பேண்ட் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் இக்கருத்தை தெரிவித்தார்.

வேலை இழப்பு தொடர்பாக ஐடி நிறுவனங்களிடமிருந்து உறுதி யான உத்தரவாதத்தை அரசு பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட் டார். இத்துறையின் வளர்ச்சி 8 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை இருக்கும்பட்சத்தில் ஆள்குறைப்பு இருக்காது. அதுவும் அதிக அள வில் ஊடகங்களில் வெளியான அளவுக்கு வேலையிழப்பு இருக் காது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐடி துறையில் 5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்துறையின் மீது அரசு உரிய கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில வாரங்களாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பெரிய நிறுவனங்களாகத் திகழும் விப்ரோ, இன்ஃபோசிஸ், காக்னிசென்ட் உள்ளிட்ட நிறுவனங் களில் பெருமளவு ஆள்குறைப்பு நிகழ்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ெக் மஹிந்திரா தனது பணியாளர்களின் ஆண்டு செயல்பாட்டு மதிப்பீட்டு அறிக்கை யின்படி மிகக் குறைந்த அளவில் பணி புரிந்தவர்கள், முற்றிலும் செயல்படாதவர்கள் உள்ளிட்டவர் களை நீக்கும் பணியை மேற் கொண்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் ஆயிரக் கணக்கானோருக்கு வேலை போகும் என கூறப்பட்டது.

அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட நெருக்குதல் மற்றும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளிலும் ஐடி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்குதல் காரணமாக இத்தொழில்துறை கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளது.

இதன் விளைவாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு வேலை போகும் என ஹெட் ஹண்டர்ஸ் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. இதே போல மெக்கின்ஸி நிறுவனமும் அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்போது ஐடி துறையில் உள்ளவர்களில் பாதிக்கும் அதிகமானவர்களுக்கு வேலை இருக்காது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT