சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) விதிமுறைகளில் மாற்றம் செய்யும் திட்டம் ஏதும் அரசிடம் கிடையாது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில், சில்லரை வர்த்தகத்தில் பன்னாட்டு பிராண்டு நிறுவனங்களை அனுமதிப் பதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யும் திட்டம் ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி இந்திய சில்லரை வர்த்தக நிறுவனங்களில் அதிகபட்சமாக அந்நிய நிறுவனங்கள் 51 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதிக் கப்படுகிறது. இந்த விதிமுறையை மாற்றப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதுவரையில் பன்னாட்டு நிறுவ னமான டெஸ்கோ-வுக்கு மட்டுமே சில்லரை வர்த்தகத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார். உணவு பதனீட்டுத் தொழிலில் முதலீடு செய்துள்ள அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
கடந்த நிதி ஆண்டில் 2016-2017 வரையான காலத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாட்டு இறைச்சி மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ரூ.27,610 கோடியாகும். மொத்தம் 11 லட்சம் டன் மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் 81 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் கூடங்கள் மற்றும் பதனிடும் ஆலைகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள், மத்திய வேளாண் மற்றும் பதனீட்டுத் துறை, உணவு பாதுகாப்புத் துறை வல்லுநர்கள், கால்நடை மருத் துவர்கள் அடிக்கடி ஆய்வு செய்வதாகவும் கூறினார்.
ஆய்வு செய்யும்போது சுத்தம், கழிவுகள், விலங்குகளைக் கொல் லும் முறை, அவற்றை பதப்படுத் தும் முறை, இதற்கேற்ற கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதி, ஆவணங் களை உரிய வகையில் பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார்.
ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதில் எதிர்கொள்ளும் பிரச் சினைகளுக்கு வர்த்தக அமைச்சகம் உடனுக்குடன் தீர்வு காண்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
எஸ்இஇஸட்-க்கு வரிச் சலுகை
எஸ்இஇஸட் எனப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு கடந்த நிதி ஆண்டில் ரூ. 56,418 கோடி வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த சலுகையானது கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களுக்கானதாகும்.
2015-16-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனங்களுக்கு ரூ.52,216 கோடி வரிச் சலுகை அளிக் கப்பட்டதாக அவர் கூறினார். சிறப்புப் பொருளாதார மண்டலங் களிலிருந்து ரூ.3.58 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 109 சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான அனுமதியை பெற்ற நிறுவனங்களே அத்திட்டத்தைக் கைவிட்டுள்ளன. தொழில் வாய்ப்பு மற்றும் சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார தேக்க நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். இதில் தமிழக்திலிருந்து 10 சிறப்புப் பொரு ளாதார மண்டலங்கள் தங்கள் திட்டத்தைக் கைவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதில் முதல் 5 ஆண்டுகளில், ஏற்றுமதி வருமானத்துக்கு 100 சதவீத வரி விலக்கும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 சதவீத வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
3 ஆண்டு செயல் திட்டம்
மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பான நிதி ஆயோக் தற்போது 3 ஆண்டு செயல் திட்ட அறிக்கையை இறுதி செய்து வருவதாகவும் 15 ஆண்டுக்கான தொலைநோக்கு ஆவணத்தை தயாரித்து வருவதாகவும் மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார். 15 ஆண்டுக்கான தொலை நோக்கு அறிக்கையா னது பொருளாதார அறிஞர்கள், வணிகவியல் ஆசிரியர்கள், வேளாண் நிபுணர்கள், அறிவியல் தொழில்நுட்ப அறிஞர்கள் ஆகி யோருடன் கலந்து தயாரிக்கப்பட் டுள்ளதாக அவர் கூறினார்.
மத்திய அரசு ஆதரவில் செயல்படுத்தப்படும் நலத்திட் டங்களின் எண்ணிக்கை 28 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் கூறினார்.
மாநில முதல்வர்களின் துணைக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் முன்னர் செயல்படுத்தப்பட்டு வந்த 66 நலத் திட்டங்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆகக் குறைக்கப் பட்டுள்ளதாகக் கூறினார்.
பிரதான திட்டங்கள் 6, முக்கிய திட்டங்கள் 20, எஞ்சிய 2-ம் விருப்ப அடிப்படையிலான திட்டங்கள் என்று அவர் மேலும் கூறினார்.
தினசரி 22 கி.மீ சாலை
நாளொன்றுக்கு தேசிய நெடுஞ்சாலையில 22 கி.மீ. நீள சாலை போடப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் மன்சுக்லால் மாண்டவியா தெரிவித்தார். 2015-16-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 16 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டன. 2016-17-ல் நாளொன்றுக்கு 11 கி.மீ. தூரத்துக்கு சாலை போடப்பட்டதாக அவர் கூறினார்.