விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன ஒப்பந்த விவ காரத்தால் சிறுமுதலீட்டாளர் களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய செபி நடவடிக்கை எடுக்க இருக்கிறது.
விஜய் மல்லையா யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை 7.5 கோடி டாலருக்கு டியாஜியோ என்ற இங்கிலாந்து நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு விற்பனை செய்தார். இந்த ஒப்பந்தம் காரணமாக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த சிறு முதலீட்டாளர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி விரைவில் எடுக்க இருக்கிறது. இது குறித்து செபி விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.