வணிகம்

என்எஸ்இ புதிய சிஇஓ சம்பளம் ரூ.8 கோடி

செய்திப்பிரிவு

என்எஸ்இ புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் விக்ரம் லிமயே சம்பளம் ஆண்டுக்கு ரூ.8 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இவரது நியமனம் மீதும், இவர் சம்பளம் குறித்தும் வரும் மார்ச் மாதம் 7-ம் தேதி நடக்கும் பங்குதாரர்கள் கூட்டத்தில் அனுமதி வாங்கப்படும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

ரூ.8 கோடி என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டிருந் தாலும், இதில் ரூ.6 கோடி நிலையான சம்பளமாகவும், ரூ.2 கோடி மாறுபடும் விகிதத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது.

நிதிச்சேவை துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டவர். கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஐடிஎப்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார். என்னுடைய முதல் பணி என்எஸ்இ நிறுவனத்தை பட்டியலிடுவதாக இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

என்எஸ்இ 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது முதல் நிறுவனத்தில் பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணா. கடந்த டிசம்பரில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்ததால், என்எஸ்இ தலைவர் அசோக் சாவ்லா தலைமையிலான குழு விக்ரம் லிமயேவை நியமித்தது.

SCROLL FOR NEXT