வணிகம்

புத்தாண்டு தினத்தில் 1,400 கோடி வாட்ஸ் அப் செய்திகள்

பிடிஐ

2017 ஆண்டு முதல் நாள் மாலையில் இந்தியாவில் வாட்ஸ் அப் வழியாக 1,400 கோடி செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 32 சதவீதம் புகைப்படங்கள், ஜிஐஎப் புகைப்படங்கள், வீடியோ மற்றும் குரல் வழி செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்கள் நேற்று முன்தினம் வெளியாகின.

வாழ்த்து செய்திகளை வாட்ஸ் அப் வழியாக பகிர்ந்து கொள்வது அதிகரித்துள்ளது. 2017 புத்தண்டு நாளின் மாலை நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சம் 1,400 கோடி செய்திகள் பகிரப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைபோது ஒரு நாளில் அதிகபட்சமாக 800 கோடி செய்திகள் பகிரப்பட்டிருந்தன என்று வாட்ஸ் அப் குறிப்பிட் டுள்ளது.

புத்தாண்டில் மட்டும் சுமார் 301 கோடி புகைப்படங்களும், 70 கோடி ஜிஐஎப் புகைப் படங்களும், 61 கோடி வீடியோ வாழ்த்துச் செய்திகளும் அனுப்பப் பட்டுள்ளன.

இந்தியாவில் 16 கோடி பேர் பேருக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வரு கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

வாட்ஸ்அப் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஜிஐஎப் புகைப் படங்களை அனுப்பும் வசதியை சேர்த்திருந்தது. தவிர வீடி யோவை டவுன்லோடு செய்யா மல் பார்க்கும் வசதி உள்ளிட் டவையும் சேர்த்திருந்தது. சமீபத் தில் வாட்ஸ்அப் மேம்படுத்தப் பட்ட மாடலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT