வணிகம்

எல் அண்ட் டி டெக் ஐபிஓ விண்ணப்பங்கள் குவிந்தன

பிடிஐ

எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீட்டுக்கு 2.48 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. கடந்த திங்கள் முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்று ஐபிஓவுக்கான விண்ணப்ப காலம் முடிவடைந்தது.

சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கில் 1.65 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்தன. நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப் பட்ட பங்குகளுக்கு 5.01 மடங்கும், நிறுவன அல்லாத முதலீட்டாளர்க ளுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 1.03 மடங்குக்கும் விண்ணப்பங்கள் வந்தன.

ஒரு பங்கின் விலையாக ரூ.850-860 என நிர்ணயம் செய்யப்பட் டது. குறைந்தபட்சம் 16 பங்குகள் அல்லது அதன் மடங்குகளாக முத லீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். ஐபிஓவுக்கு பிறகு இந்த நிறுவ னத்தில் எல் அண்ட்டியின் பங்கு 89.8%-மாக குறையும்.

SCROLL FOR NEXT