வணிகம்

நடப்பாண்டில் காப்பீடு வளர்ச்சி 4 சதவீதமாக இருக்கும்: அசேசேம் அறிக்கையில் தகவல்

பிடிஐ

இந்தியாவில் காப்பீடு வளர்ச்சி நடப்பாண்டு இறுதிக்குள் 4 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் என்று அசேசேம் அமைப்பின் அறிக்கை கூறியுள்ளது. அசோசேம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காப்பீடு வளர்ச்சி என்பது இந்தியாவின் மொத்த ஜிடிபியில், காப்பீடு பிரீமியத்தின் பங்குக்கு உள்ள விகிதம் காப்பீடு வளர்ச்சி ஆகும்.

இந்தியாவின் காப்பீடு திட்டங் களின் வளர்ச்சி ஏற்றத்திலேயே உள்ளது. 2014-ம் ஆண்டில் 3.3 சதவீதமாக இருந்தது, 2015-ம் ஆண்டில் 3.44 சதவீதமாக உயர்ந்தது. அரசு பல்வேறு காப்பீடு திட்டங்களை கொண்டு வந்ததுதான் இந்த ஏற்றத்துக்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

காப்பீடு துறையில் தாராள மாயமாக்கல் தொடங்கி பத்தாண்டு கள் ஆகியுள்ள நிலையில், தொடர்ச்சியாக சீரான ஏற்றம் கண்டு வருகிறது. 2001-ம் ஆண்டு 2.71 சதவீதமாக இருந்த காப்பீடு வளர்ச்சி 2009-ம் ஆண்டில் 5.20 சதவீதமாக இருந்தது. தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்தாலும், ஏற்ற இறக்கமான சூழலால் 2014-ம் ஆண்டில் 3.3 சதவீதமாக சரிந்தது.

2015-ம் ஆண்டில் 3.4 சதவீதமாக இருந்தது. அதேநேரத்தில் சர்வதேச அளவில் காப்பீடு வளர்ச்சி 6.2 சதவீதமாக இருந்தது குறிப் பிடத்தக்கது. சர்வதேச அளவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகுந்த வேறுபாடு இருக்கிறது.

தற்போது ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் பாலிசிகள் இந்தியாவில் 36 கோடி மக்கள் எடுத்துள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருக்கிறது. முந்தைய ஆண்டில் 28.8 கோடி நபர்களுக்கு ஹெல்த் பாலிசி இருந்தது.

இது சமூக பாதுகாப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக அரசு கொண்டுவந்த குறைவான பிரீமியம் தொகை கொண்ட ஆயுள் மற்றும் ஆயுள் காப்பீடு அல்லாத திட்டங்களால்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கடந்த ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் காப்பீடு என்கிற திட்டத்தின் கீழ் அரசு பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டங்களை 2015-ம் ஆண்டு கொண்டு வந்தது.

சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் விபத்துகளால் ஏற்படும் உயிர் சேதங்களுக்கு ரூ.2 லட்சம் வரை இழப்பீடு வழங்க வகை செய்தது. இதற்கான ஆண்டு பிரீமியம் ரூ.12 ஆகும்.

இன்னொரு பக்கம் விவசாயி களுக்கு ஏற்படும் பாதிப்புகளி லிருந்து காக்கவும் காப்பீடு திட்டத்தை அரசு கொண்டு வந்தது என்றும் அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

தேசிய விவசாய காப்பீடு திட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்துக்காக மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் ரூ.5,501.15 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் அறிக்கையை வெளிட்டு அசோசேம் தலைவர் சந்தீப் ஜஜோடியா கூறினார்.

SCROLL FOR NEXT