வணிகம்

ஐஐஎம் (ஏ) இயக்குநர் ஆஷிஷ் நந்தா ராஜினாமா

செய்திப்பிரிவு

இந்தியாவின் முக்கியமான மேலாண்மை நிறுவனமான ஐஐஎம் அகமதாபாத்தின் இயக்கு நர் பொறுப்பில் இருந்து ஆஷிஷ் நந்தா ராஜினாமா செய்திருக்கிறார். இன்னும் ஒர் ஆண்டுக்கு மேல் இவரது பதவி காலம் இருந்தாலும், தன்னுடைய சொந்த காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்திருக்கிறார். மனைவி, மகனுடன் நேரம் செலவிட முடி யாததால் ராஜினாமா செய்திருப் படாகக் கூறியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவி காலம் 2018-ம் ஆண்டு செப்டம் பரில் முடிவடைகிறது. ஆனால் ஓர் ஆண்டு முன்கூட்டியே வெளி யேறுவார் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.

ஐஐஎம்(ஏ) இயக்குநராக நிய மனம் செய்யப்படுவதற்கு முன்பு ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். ஐஐஎம் அகமதாபாத் இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் வெளிநாட்டு கல்லூரி பேராசிரியர் இவர்தான். இவர் ஐஐஎம் அகமதாபாத்தில் (1983) படித்தவர்.

ஐஐஎம் (ஏ) தலைவர் குமார் மங்கலம் பிர்லா இவரது ராஜி னாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT