வணிகம்

ஐந்தாம் கட்ட தங்க பத்திரம்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பிடிஐ

ஐந்தாம் கட்ட தங்க பத்திரத்துக்கான பரிந்துரை நாளை முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை தங்கப் பத்திரங்கள் வேண்டி விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 23-ம் தேதி பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங்க் கார்ப்பரேஷன், தபால் நிலையங்கள், பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய இடங்களில் தங்க பத்திரங்களை வாங்க முடியும்.

இந்த பத்திரங்களை டீமேட் வடி வில் மாற்றிக்கொள்ள முடியும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதுவரை 4 முறை தங்க பத்திரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு 2.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

முன்பு குறைந்தபட்ச முதலீடு 2 கிராம் என்று இருந்தது. அதிக முதலீட்டை பெற வேண்டும் என்பதற்காக இந்த அளவினை ஒரு கிராம் என மத்திய அரசு குறைத்திருக்கிறது. முதல் மூன்று கட்டங்களில் ரூ.1,318 கோடி அளவில் இதன் மூலம் முதலீடு திரட்டப்பட்டது. நான்காவது வெளியீட்டின் போது ரூ.919 கோடி முத லீட்டை மத்திய அரசு திரட்டியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT