வணிகம்

பிரீமியம் சைக்கிளுக்கு தனிப்பிரிவு: டிஐ திட்டம்

செய்திப்பிரிவு

முருகப்பா குழுமத்தின் அங்கமான டிஐ சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் பிரீமியம் சைக்கிள்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கென பிரீமியம் சைக்கிள் குழுமம் (பிசிஜி) என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ‘நாளைய சைக்கிள்கள்’ என்ற தலைப்பில் வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு உயர் ரக சைக்கிள்களை தயாரித்து அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் அருண் அழகப்பன் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் உற்பத்தியை அதிகரிப் பதற்காகவும்,வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் பஞ்சாப் மாநிலத்தில் ராஜ்புரா எனுமிடத்தில் கடந்த ஆண்டு நவீன ஆலை தொடங்கப்பட்டது.

வழக்கமான விற்பனையகங்கள் தவிர, உயர் ரக சைக்கிள்கள் விற் பனைக்காக டிராக் அண்ட் டிரெய்ல் என்ற பெயரில் விற்பனையகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். டிஐ சைக்கிள்ஸ் நிறுவனத் துடன் கூட்டு சேர்ந்து ரிட்லே நிறுவனம் 11 புதிய மாடல் சைக்கிள் களை இந்தியச் சந்தைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT