இந்திய மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் 10 மடங்கு அளவுக்கு உயரும் என ஏடிஏஜி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார். இந்திய மியூச்சுவல் பண்ட சங்கமான ஆம்பியின் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் 10-ல் 9 நபர்கள் மொபைல் போன் பயன்படுத்து கின்றனர். 10-ல் மூன்று நபர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார் கள். ஆனால் 25-ல் ஒருவர் மட்டுமே மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்கிறார்கள். இந்திய மியூச்சுவல் பண்ட் துறையை சர்வதேச அளவில் ஒப்பிட்டால், நமது துறை மிகவும் சிறியதாக இருக்கிறது.
இந்திய மியூச்சுவல் பண்ட் துறை கையாளும் மொத்த தொகையை விட சர்வதேச அளவில் 58 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தொகையை கையாளுகின் றன.
இந்தியாவில் 1964-ம் ஆண்டு யூடிஐ மியூச்சுவல் பண்ட் தொடங் கப்பட்டது. ஆனால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு எந்த தனியார் நிறுவனத்துக்கும் மியூச்சுவல் பண்ட் தொடங்க அனுமதி கிடைக்க வில்லை. 1993-ம் ஆண்டு கோத்தாரி பயோனியர் மியூச்சுவல் பண்ட் தொடங்கப்பட்டது. 95-ம் ஆண்டு ரிலையன்ஸ் தொடங்கப்பட்டது. 95-ம் ஆண்டு ரூ.60 கோடியை நாங் கள் கையாண்டோம். 2002-ம் ஆண்டு ரூ.2,200 கோடியை கையாண்டோம். தற்போது 100 மடங்குக்கு மேல் உயர்ந்து ரூ.3.58 லட்சம் கோடியை கையாளுகிறோம்.
இந்த காலகட்டத்தில் இந்திய பங்குச்சந்தையின் வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்கு செபி முக்கிய பங்காற்றி இருக்கிறது. வரும் காலத்தில் மியூச்சுவல் பண்ட் துறை வளர்ச்சிக்கு செபியுடன் இணைந்து பணியாற்றுவது அவசியம். புதிய முதலீட்டாளர்களுக்கான விதிமுறைகளை செபி மேலும் எளிமையாக்க வேண்டும். அதே போல மியூச்சுவல் பண்ட் விளம்பரம் செய்வதற்கான விதிமுறைகளையும் எளிமையாக்க வேண்டும். இதன் மூலம் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும்.
தற்போது 6 கோடி முதலீட்டாளர் கள் உள்ளனர். இன்னும் ஐந்து ஆண்டுகளில் 60 கோடி முதலீட் டாளர்கள் இருப்பார்கள் என்றார்.