உள்நாட்டில் கருப்பு பணம் வைத் திருப்போர் தாமாக முன்வந்து கணக்குகளை தாக்கல் செய்வதற் கான காலக்கெடு இன்று தொடங் குகிறது. வரும் நான்கு மாதங் களுக்கு இவர்கள் கணக்கு தாக்கல் செய்யலாம். இவ்வாறு தாக்கல் செய்யும் தொகைக்கு வரி மற்றும் அபராதம் மொத்த மாக சேர்த்து 45 சதவீதம் செலுத்த வேண்டும். வரி செலுத்து வதற்கு 2 மாதம் அவகாசம் அளிக் கப்படுகிறது. இதன்படி நவம்பர் 30-க்குள் அவர்கள் முழு வரித் தொகையைய ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.
ஆனால் ஊழல் மற்றும் லஞ்சம் மூலம் முறைகேடாக வழியில் பணம் சம்பாதித்தவர்கள் இந்த முறையை பயன்படுத்தி கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வர முடியாது.
முன்னதாக இம்மாத தொடக் கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி கேட்கும் 14 கேள்விகளுக்கான பதிலை வருமான வரித்துறை வெளியிட்டது. நிம்மதியான தூக்கம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
மேலும் அவர் கூறும் போது கருப்பு பணம் வைத்திருப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நிம்மதி யாக இருக்கலாம். இல்லை என்றால் விரைவில் கடும் நெருக் கடியை சந்திக்க வேண்டி இருக் கும் என்று அவர் எச்சரித்தார்.
சொத்துகளை தாக்கல் செய்திருப்பவர்கள், எதிர்காலத் தில் அந்த சொத்துகளை விற்கும் பட்சத்தில் அவர்கள் மூலதன ஆதாய வரி செலுத்தியாக வேண்டும்.
தனி நபர்கள், இந்து கூட்டு குடும்பம், நிறுவனங் கள், சங்கங்கள் என யார் வேண்டுமானலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்.