வணிகம்

ரிலையன்ஸ் குழுமத்தில் அடுத்த தலைமுறை

ஐஏஎன்எஸ்

ரிலையன்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் மூன்றாம் தலைமுறை அடியெடுத்துவைக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இரட்டை குழந்தைகளான இஷா மற்றும் ஆகாஸ் ரிலையன்ஸ் குழுமத்தின் இருவேறு நிறுவனங்களில் இயக்குநர்களாக பொறுப்பேற்க இருக்கிறார்கள்.

இஷா அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும், ஆகாஸ் அம்பானி, ரிலையன்ஸ் குழு மத்தின் இ-காமர்ஸ் நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்திலும் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முடிவுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவால் எடுக்கப்பட்டதாகும். இஷா அம்பானி யேல் பல்கலைக்கழகத்தில் படித்தவர். மேலும் மெக்கென்ஸி நிறுவனத்தின் நியூயார்க் அலுவலகத்தில் பிஸினஸ் அனலிஸ்டாகவும் வேலை பார்த்திருக்கிறார்.

ஆகாஷ் அம்பானி பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளா தாரம் படித்தவர். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் திட்ட மேம்பாடு உள்ளிட்டவற்றில் பங்காற்றியிருக்கிறார்.

SCROLL FOR NEXT