வணிகம்

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.27,000 கோடி முதலீடு

பிடிஐ

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கடன் சந்தையில் ரூ. 27,000 கோடியை முதலீடு செய்துள்ளன. மேலும் கடன் சந்தையில் கார்ப்ப ரேட் நிறுவனங்களும், சில்லரை முதலீட்டாளர்களும் அதிக அளவில் ஏற்கனவே முதலீடு செய்து வரு கின்றனர். 2016ம் ஆண்டில் கடன் சந்தை முதலீடு ரூ.3.31 லட்சம் கோடி யாக உள்ளது. இது தொடர்பாக கருத்து கூறியுள்ள வல்லுநர்கள், கார்ப்பரேட் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் கடன் சந்தை யில் முதலீடுகளை மேற்கொள்வது தொடரும் பட்சத்தில் வரும் மாதங் களில் வட்டி விகிதங்கள் குறை வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தில் (செபி) புள்ளி விவரங்கள் படி மியூச்சுவல் பன்ட் நிறுவனங்கள் ரூ.27,473 கோடியை ஜனவரி 23ம் தேதிவரை முதலீடு செய்துள்ளன. இந்த முதலீடு வரும் மாதங்களிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT