வணிகம்

கோல்டன் ஓரியோ அறிமுகம்

செய்திப்பிரிவு

மாண்டலீஸ் இண்டர்நேஷனல் நிறு வனம் கோல்டன் ஓரியோ என்னும் புதிய பிஸ்கட்டை நேற்று சென்னை யில் அறிமுகப்படுத்தியது. 2011-ம் ஆண்டு முதல் பிஸ்கட் விற்பனையில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கேட்பரி ஓரியோ பிஸ்கட் 2011-ம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கிறது. இரு மாதங்களுக்கு முன்பு போர்ன்விடா பிஸ்கட்டை சந்தையில் அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக கோல்டன் ஓரியோ பிஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பிஸ்கட்கள் இம்மாத இறுதி யில் விற்பனையாக தொடங்கும். இந்தியாவில் மொத்தம் விற்பனை யாகும் பிஸ்கட்களில் 75% ரூ.5 மற்றும் ரூ.10 பிஸ்கட் ஆகும். அத னால் ரூ.10 மற்றும் ரூ.35 ஆகிய இரு வடிவங்களில் இந்த பிஸ்கட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று மார்கெட்டிங் பிரிவு (பிஸ்கட்) துணை இயக்குநர் செல்ல பாண்டி யன் தெரிவித்தார்.

பெங்களூரு மற் றும் பஞ்சாப் மாநிலம் லூதியானா வில் பிஸ்கட் தொழிற்சாலை உள் ளது. நிறுவனத்தின் விற்பனையில் மஹாராஷ்டிரம் முதல் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளதாகவும் செல்ல பாண்டியன் கூறினார்.

SCROLL FOR NEXT