வணிகம்

நால்கோவின் 4 காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள்: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தொடங்கி வைப்பு

பிடிஐ

பொதுத்துறை நிறுவனமான நால்கோ நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நான்கு காற்றாலைகளை, மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

நால்கோவின் அலுமினியம் உற்பத்தியை ஆண்டுக்கு 10 லட்சம் டன்னாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நான்கு ஆலைகளும் 198 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். ரூ.1,350 கோடி செலவில் இவை அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு ஆலைகளும், மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தலா ஒரு ஆலையும் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர நிறுவனம் மேலும் 120 மெகாவாட் திறனுக்கு காற்றாலை அமைப்பதற்கான திட்டத்தையும் வைத்துள்ளது. தவிர சூரிய மின்சக்தி திட்டங்களையும் அமைக்க உள்ளது.

மத்திய அரசு நால்கோவின் ஒடிஷா ஆலையில் உற்பத் தியை அதிகரிப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும். இதனால் இவர்கள் வேலைக் காக இடம் பெயரத்தேவை யில்லை.

மாநில அரசின் வருவாயும் கணிசமாக உயரும். ஒடிஷாவின் அன்குல் ஆலையை விரிவாக்கம் செய்ய ரூ.20,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதன்முலம் ஆண்டுக்கு 4.6 லட்சம் டன்னாக உள்ள உற்பத்தி, 10 லட்சம் டன்னாக அதிகரிக்கும்.

இதுதவிர ஆண்டுக்கு 6 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆலையை காமாக்‌ஷ்யா நகரில் அமைப்பதற்கான முயற்சிகளிலும் உள்ளது. மேலும் தாமன்ஜோடி இடத்தில் அமைந்துள்ள ஆலை உற்பத்தியை ஆண்டுக்கு 10 லட்சம் டன் அதிகரிக்க ரூ. 5,400 கோடி முதலீடு செய்துள்ளது.

பல மத்திய அமைச்சர்களும் ஒடிஷா மாநில முன்னேற்றத் துக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தவிர என்டிபிசி நிறுவனம் மின்னுற் பத்தி ஆலைகளை மேம்படுத்தவும் திட்டம் வைத்துள்ளது.

டெல்கார் முதல் பாரதீப் வரையிலான தூரத் துக்கு உள்நாட்டு நீர் வழிப் போக்கு வரத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நால்கோ நிறுவனம் புவனேஸ் வரில் உள்ள ஐஐடி நிறுவனத்துடன் அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்து கொண் டுள்ளது.

SCROLL FOR NEXT