வணிகம்

உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், சேலம், நெய்வேலியில் விமான சேவை: முதல்வர் முன்னிலையில் மத்திய அரசுடன் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஓசூர், சேலம், நெய்வேலியில் விமான சேவையைத் தொடங்கு வதற்காக மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று முதல்வர் கே.பழனிசாமி முன்னிலை யில் கையெழுத்தானது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத் திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் கடந்தாண்டு அக்டோபர் 21-ம் தேதி தேசிய சிவில் விமான போக்குவரத்துக் கொள்கை வெளியிடப்பட்டது. இதன் மூலம் தற்போது மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்து இணைப்பு திட்டத்தை (உதான்) தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்தை எளிமையாக்கி, குறைவான கட்டணத்தில் சாதாரண மக்களும் விமானப்பயணம்மேற்கொள்ள ஏதுவாக விமான சேவை வழங்குவதாகும்.

தமிழகத்தில் முதல்கட்டமாக ஓசூர், சேலம் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களில்இத்திட்டத்தின் கீழ் விமான சேவைகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறிய நகரங்களில் விமான சேவை தொடங்கப்பட்டு, அந்நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சியடைவதுடன், தொழில் மற்றும் வர்த்தகம் பெருகி வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும்.

SCROLL FOR NEXT