ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் கூடுதலாக ரூ.130 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு ஏற்ப இது வரை ரூ.520 கோடியை நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் பிஎம்டபிள்யூ குழுமத்தின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.1,250 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் பிஎம்டபிள்யூ பைனான் ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் முதலீடு ரூ.730 கோடியாகும்.
புதிய முதலீடுகள் மூலம் புதிய மாடல்களை அறிமுகப் படுத்த நிறுவனம் திட்டமிட்டுள் ளது. இதற்கேற்ப உள்ளூர் உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய 5 சீரிஸ் மாடலை இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் 6 சீரிஸ் ஜிடி மாடலை அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யவும் திட்ட மிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய நிறுவனத்தின் இந்திய தலைவர் விக்ரம் பாவா, 2007-ம் ஆண் டிலிருந்து தொடர்ச்சியாக முதலீடு களை அதிகரித்து வருகிறோம். இந்த ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.1,250 கோடியாக இருக்கும். புதிய முதலீட்டை நிறுவனத்தின் இரு சக்கர வாகன செயல்பாடுகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப் படும் என்றார்.
மேலும் நிறுவனத்தின் விநி யோகஸ்தர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார். தற்போது நிறுவனத்துக்கு 18 விநியோகஸ்தர்கள் உள்ளனர். 30 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. 41 விற்பனை மையங்கள் உள்ளன. 2018-ம் ஆண்டுக்குள் இதை 50 ஆக உயர்த்த உள்ளோம். மேலும் முக்கிய 30 நகரங்களுக்கு செல்ல உள்ளோம் என்றார்.
நிறுவனம் இந்த மாத இறுதியில் புதிய 5 சீரிஸ் வரிசை காரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் 5 சீரிஸ் மாடலில் 66,000 கார்களை இதுவரை விற்பனை செய்துள்ளோம் எங்களது மொத்த விற்பனையில் இது 30 சதவீதம் என்றார்.
அடுத்த ஆண்டில் 6ஜிடி காரை அறிமுகம் செய்ய உள்ள தாகவும் கூறினார். எங்களது 16 மாடல்களில் தற்போது 8 மாடல்கள் உள்ளூர் உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. சென்னை ஆலையில் இவை தயாராகிறது என்றார். சென்னை ஆலை ஒரு ஷிப்டில் 14,000 கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.