வணிகம்

சீன தேயிலை வர்த்தக சங்கத்துடன் உபாசி ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

உதகையில் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம்(உபாசி) மற்றும் சீனா தேயிலை வர்த்தக சங்கம் (சிடிஎம்ஏ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. உலக சந்தையில் இந்தியா மற்றும் சீனா தேயிலைகள் முன்னிலையில் உள்ளன.

தேயிலை உற்பத்தி மற்றும் பயன் பாட்டை மேம்படுத்துவதற்காக தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் மற்றும் சீனா தேயிலை வர்த்தகர்கள் சங்கங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட் டுள்ளது. உபாசி தலைவர் என்.தர்மராஜ் மற்றும் சீனா தேயிலை வர்த்தகர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ஷூ ஜிசாங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

இந்த ஒப்பந்தம் மூலம் தேயிலை துறையில் உள்ள தொழில்நுட் பத்தை இருதரப்பினரும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உபாசி தலைவர் என்.தர்மராஜ் கூறும் போது, இந்தியா மற்றும் சீனா உலகின் மிக பெரிய தேயிலை உற்பத்தியாளர்களாகவும், நுகர்வோர்களாகவும் உள்ளன. உயர் தரம் வாய்ந்த தேநீருக்கான உலகளாவிய நுகர்வோர் அடித்தளத்தை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு தொழில்நுட்ப புத்தாக்கத்துக்கு ஆதரவளிப்பதை இரு தரப்பும் இலக்காக கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் இத்துறையிலுள்ள தொழில் நுட்பங்களை பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலை தொழில் முன்னேற்றம் அடையும் என்றார்.

சீன தேயிலை வர்த்தகர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ஷூ ஜிசாங் கூறும் போது, இந்தியாவில் தேயிலை விவசாயம் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் பிளாக் டீ உற்பத்தி அதிகம். சீனாவில் கிரீன் டீ, ரெட் டீ, பிளாக் டீ, ஒய்ட் டீ உள்ளிட்ட பல ரக தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. உலக அளவில் சீனாவும், இந்தியாவும் தேயிலை உற்பத்தியில் முன்னிலையில் உள்ள நாடுகள். இதனால் உலக அரங்கில் தேயிலையின் நிலையான தரத்தை இந்த ஒப்பந்தம் மூலம் அடைய முடியும் என்றார்.

SCROLL FOR NEXT